காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை |

தமிழ் திரையுலகில் சின்னத்திரை தொடர்களின் மூலம் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. தற்போது ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். கவர்ச்சி மற்றும் நெருக்கமான காட்சிகளில் இருந்தாலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ரச்சிதா அளித்த பேட்டியில் சமூக வலைதளங்களில் பரவி வரும் மார்ப்பிங் போட்டோக்கள் குறித்து கூறியுள்ளார். அதன்படி, "என்னுடைய போட்டோக்களை மார்ப் பண்ணி பதிவு செய்கிறார்கள். கடந்த வாரத்தில் வெள்ளை சட்டை, பர்ப்பிள் டி-ஷர்ட் அணிந்து ஒரு போட்டோவை பதிவிட்டேன். அதனை ஆடை இல்லாமல் ஆபாசமாக மார்பிங் செய்து பதிவு செய்கிறார்கள்.
ஒரு நடிகையாக இதை எங்க ஸ்டாப் பண்றதுன்னு எனக்கு தெரியவில்லை. நான் போட்டோக்கள் பதிவிடுவதை நிறுத்தணுமா, அல்லது நாங்கள் வெளியே வருவதையே நிறுத்தணுமா? நான் ப்ளாக் செய்தால் எனக்கு மட்டும் தானே தெரியாது. ஆனால், மற்றவர்கள் அதனை பார்ப்பார்கள். அதை நினைத்தால் ரொம்ப கஷ்டமாக உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.




