Advertisement

சிறப்புச்செய்திகள்

வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனக்கு யாரும் முழு சம்பளம் தந்ததில்லை: ரச்சிதா மகாலட்சுமி பேச்சு

05 ஜன, 2026 - 10:47 IST
எழுத்தின் அளவு:
No-one-has-ever-paid-me-my-full-salary-Rachitha-Mahalakshmis-speech
Advertisement


மித்ரா பிக்சர்ஸ் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் " 99/66 (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு)". இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரச்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர்.

பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.

விழாவில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி பேசியதாவது: ஷீட்டிங்கின் போது இந்தப் படத்தை சின்ன படம் என நினைத்தேன் இங்கு விழா பிரம்மாண்டமாக நடப்பதைப் பார்த்தால் மிகப்பெரிய படமாக தெரிகிறது. புத்தர் பற்றி இப்படத்தில் சொல்லியிருக்கும் விஷயம் கண்டிப்பாக பெரிதாக பேசப்படும்.

எனது சினிமா பயணத்தில் சம்பள பாக்கி போன்ற பல பிரச்னைகள் நடந்திருக்கும். சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றி விடுவார்கள். எனக்கும் அது நடந்திருக்கிறது. ஆனால் இந்த படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பிலேயே எனது முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டார்கள். எனக்கு யாருமே இதை செய்யவில்லை. அன்பாக பார்த்துக் கொண்டார்கள்.

இதில் நான் பேயாக நடித்திருக்கிறேன். ஆனால் நான் நார்மலான பொண்ணுதான். அவ்வப்போது மட்டும் பேய் பிடிக்கும். கோவம் வருவது போலத்தான் அந்த பேயும் வரும். அது நடிப்பு போல தெரியாது. ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'திரெளபதி 2' பாடலில் சின்மயி பாடல் நீக்கம்: இயக்குனர் பேட்டி'திரெளபதி 2' பாடலில் சின்மயி பாடல் ... பொங்கல் போட்டி : டிரைலர்களில் முந்தும் 'ஜனநாயகன்' பொங்கல் போட்டி : டிரைலர்களில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap