மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன்மூலமும் பிரபலமானார். இதையடுத்து சீரியலை விடுத்து வெள்ளித்திரைக்கு பயணமானார். வெப்சீரிஸ்களிலும் நடிக்கிறார்.
தயாரிப்பாளர் ஜே சதீஷ் குமார் முதன்முறையாக இயக்கி உள்ள படம் ‛பயர்'. இதில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படம் தொடர்பாக ஏற்கனவே வெளியான சில அறிமுக வீடியோக்கள், டீசரில் கவர்ச்சியான விஷயங்கள் அதிகம் இருந்தன.
சில தினங்களுக்கு முன் ‛மெது மெதுவாய்' என்ற பாடலின் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டனர். அதில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்திருந்தார் ரச்சிதா. இப்போது பாடலின் முழு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அதில் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா இருவரும் அவ்வளவு நெருக்கமாக கவர்ச்சியாக நடித்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் ரச்சிதாவா இப்படி நடித்துள்ளார் என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த பாடல் வலைதளங்களில் வைரலானது.
பயர் படம் பிப்., 14ல் ரிலீஸாகிறது.