ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தமிழில் அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மனோ சித்ரா. அதன் பிறகு நீர் பறவை, வீரம் மற்றும் தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் பெரிதாக சினிமாவில் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்மறையாக அமைந்தது.
தற்போது மனோ சித்ரா அளித்த பேட்டி ஒன்றில் அவரின் சினிமா பயணத்தில் ஏற்பட்ட தொய்வு குறித்து பேசியதாவது, "வீரம் படத்தின் கதையை என்னிடம் கூறியபோது தமன்னா பாதியில் இறந்துவிடுவார். அதன் பின் நீங்கள் தான் அஜித்திற்கு ஜோடி என்றனர். அதன்பிறகு தான் தெரியும் அது பொய் என்று. ஆனாலும் அஜித் சாருக்காக தான் நான் நடித்தேன். இதனால் எனது சினிமா வாழ்க்கை பாதிப்படைந்தது" என தெரிவித்துள்ளார்.