'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பேய் சீரியஸ் ஆக நடித்து வெளிவந்த படங்கள் காஞ்சனா. இப்படம் இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
'பென்ஸ்' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் கடந்த வாரத்தில் காஞ்சனா 4ம் பாகத்தின் பணிகளை ராகவா லாரன்ஸ் துவங்கியுள்ளார். இப்படத்தை கோல்ட் மைன்ஸ் நிறுவனத்தின் மூலம் மணி ஷா தயாரிக்கின்றனர்.
சுமார் ரூ. 130 கோடிக்கு மேல் பொருட்செலவில் இப்படம் உருவாகிறது. இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகையான நோரா பதேகி நடிக்கின்றார். மற்றபடி இதற்கு முன் காஞ்சனா பட டசீரியஸில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் இதிலும் நடிக்கவுள்ளனர்.
இப்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை பொள்ளாச்சியில் லாரன்ஸ் தொடங்கியுள்ளார். விரைவில் படம் பற்றிய அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.