மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
பாலிவுட் நடிகரும், இயக்குனருமான அனுராக் காஷ்யப் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ள படம் "பேட் கேர்ள்". இதில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டிஜே, அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் பள்ளி மாணவிகளையும், இந்து, பிராமண சமூக பெண்களை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி பல்வேறு தரப்பிலிருந்தும் இந்த பேட் கேர்ள் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.
பிராமணர்களையும், பிராமண பெண்களையும் அவமதிக்கும் வகையில், பேட் கேர்ள் படத்தில் காட்சிகள் இடம் பெற்று உள்ளதால், படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்றும், அதை ரத்து செய் வேண்டுமென்று உலக பிராமணர்கள் நலச்சங்க தலைவர் கே.சிவநாராயணன், 'சென்சார் போர்டு'க்கு புகார் மனு கொடுத்திருந்தார்.
இதேபோல, 'இப்படத்துக்கு வழங்கப்பட்ட சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்,எதிர் காலத்தில் எந்த மத பழக்க வழக்கங்களையும், சமுதாய கலாசாரத்தையும் சீரழிக்கும் வகையில் எடுக்கப்படும் எந்த திரைப்படத்தையும் திரையிட அனுமதிக்கக்கூடாது' என்று கூறி தமிழ்நாடு பிராமண சங்கத் தலைவர் கோவை சி.ஜி.வி.கணேசன் மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ள நிலையில், 'பேட் கேர்ள்' படம் சென்சாருக்கே அப்ளை பண்ணலை-னு சொல்லி ஸ்டேட்மெண்ட் ஒன்றை சென்னை சென்சார் போர்ட் வெளியிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் டீசர் மற்றும் டிரைலருக்கு சென்சார் சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற புதிய உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், சென்சார் போர்டு இந்த விளக்கம் பேட் கேர்ள் திரைப்பட குழு பட டீசருக்கு முறையாக சென்சார் வாங்கவில்லை என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.