சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
பயங்கரவாதிகளுடனான தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'அமரன்'. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். நாளை மறுநாள் அக்டோபர் 31ம் தேதி தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இதையடுத்து படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது சாய்பல்லவியின் பழைய வீடியோவை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து, படத்திற்கு நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சாய்பல்லவி சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு பட புரமோஷனுக்காக நடந்த நேர்காணல் நிகழ்ச்சியின்போது பேசுகையில், ''காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தை பார்த்தேன். அதில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டதை காட்டினார்கள். அதேபோல் நாட்டில் மாடு வைத்திருந்த இஸ்லாமியரை ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறி சிலர் தாக்கி கொள்கின்றனர். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மதப்பற்றை வைத்து இன்னொருவரை துன்புறுத்தக் கூடாது அப்படித்தான் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் ஆக பார்க்கின்றனர். இருதரப்புக்கும் இடையே இருக்கும் பார்வைகள் வேறுபடும். வன்முறை என்பது எதற்கும் தீர்வாகாது. நாம் மனிதர்களாக இருக்க வேண்டும்; யாரையும் துன்புறுத்தக் கூடாது'' எனப் பேசியிருந்தார்.
இந்த விவகாரம் அப்போது பூதாகரமாக வெடித்தது. இதற்கு அப்போது பதிலளித்த சாய்பல்லவி, ''நான் சொன்ன கருத்து வேறு மாதிரி புரிந்து கொள்ளப்பட்டது'' என குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோவை தற்போது திடீரென பகிர்ந்துவரும் நெட்டிசன்கள், சாய்பல்லவியை நிராகரிக்க வேண்டும், அமரன் படத்தை நிராகரிக்க வேண்டும் என டிரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் எக்ஸ் பக்கத்தில், #BoycottSaiPallavi என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.
சாய்பல்லவியின் கருத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், இப்போது திடீரென பழைய வீடியோவை பரப்பி எதிர்ப்பு தெரிவிப்பது சரியில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமரன் பட ரிலீசுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தற்போது இந்த விவகாரத்தால் படத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்பது இனிமேல்தான் தெரியும்.