ஐமேக்ஸில் ஜெயிலர் 2 | ஜூன் 1ல் இளையராஜாவின் ‛சிம்பொனி' வெளியீடு | ஜூலையை குறிவைக்கும் ‛டயங்கரம்' | 'பெத்தி' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா...? | 19 ஆண்டுகளுக்கு பின் ஜீவா, அஞ்சலி கூட்டணி | கர்ணபரம்பரையாக கேட்டு மகிழ்ந்த “கண்ணகி” கதையின் கலையுலக சாதனை | ‛கருப்பு 300' கோடி வசூலிக்குமா?, மூக்குத்தி அம்மன் 3 உருவாகுமா? | கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார்' ரிலீஸ் தேதி மாற்றம் | 'பெத்தி' படத்திற்கு வந்த புதிய சிக்கல் |

தமிழ், தெலுங்கில் ஒரு ரவுண்ட் வலம் வந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது பாலிவுட்டில் தான் அதிகம் நடிக்கிறார். தென்னிந்திய மொழிகளில் நடிப்பதை குறைத்துவிட்டார். சமீபகாலமாக நடிகைகளின் பெயரில் போலியான வாட்ஸ்அப் எண் உருவாக்கி மோசடி சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அதிதி ராவ், ஸ்ரேயா போன்ற நடிகைகள் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தனர். இப்போது ரகுலுக்கும் இதேபோன்று நடந்துள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛வணக்கம் நண்பர்களே... யாரோ ஒருவர் என்னைப் போல வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்டம் செய்து மக்களுடன் அரட்டை அடிப்பது எனக்குத் தெரிய வந்துள்ளது. இது என்னுடைய எண் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும், எந்த விதமான உரையாடல்களிலும் ஈடுபட வேண்டாம். தயவுசெய்து அதை பிளாக் செய்யவும்'' என குறிப்பிட்டு அந்த போலி எண்ணையும் பகிர்ந்துள்ளார்.




