இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா என பல படங்களை இயக்கியவர் அருண்குமார். இவர் தற்போது விக்ரம், துஷாரா விஜயன் நடிப்பில் வீர தீர சூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தில் இப்படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை '5 ஸ்டார்' செந்தில் பெற்றுள்ளார். இதுகுறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.