சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் |

பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படத்தை இயக்கியவர் கீர்த்தீஸ்வரன். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் இளவட்ட ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அதனால் இப்படம் 100 கோடி தாண்டி வசூலித்து இருக்கிறது. இந்த நிலையில் தனது அடுத்த படம் குறித்து அவர் கூறுகையில், எனது இரண்டாவது படத்தை தரணி இயக்கத்தில் விஜய் நடித்த கில்லி படப்பாணியில் இயக்கப் போகிறேன். ஆக் ஷன் காதல் என ஒரு கலவையான ஜானரில் கில்லி படம் இருக்கும். தரணியின் திரைக்கதை, விஜய், பிரகாஷ்ராஜின் அதிரடியான நடிப்பு என படமே ஒரு மாஸாக இருக்கும். அதனால் எனது அடுத்த படத்தை இந்த கில்லி பாணியில் தற்போதைய காதல் மோதல் என ஒரு விறுவிறுப்பான கதையில்தான் இயக்கப் போகிறேன் என்கிறார் கீர்த்தீஸ்வரன்.