கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் |
தமிழ் சினிமா உலகில் இந்த வருடத்தைப் பொறுத்தவரையில் வசூல் வறட்சி வருடம் என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரையில் வெளியான 210 படங்களில் 10 படங்கள்தான் ஓரளவிற்கான லாபகரமான வசூல் என்பதைக் கடந்துள்ளது. மற்ற 200 படங்களும் நஷ்டத்தைக் கொடுத்துள்ள படங்கள்தான் என்பது அதிர்ச்சிகரமான உண்மை.
கடந்த இரண்டு மாதங்களாகவே பல தியேட்டர்களில் பல காட்சிகள் ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலையே இருந்தது. அதிலும் சிங்கிள் தியேட்டர்களின் நிலைதான் மிகவும் பரிதாபம். சென்னை போன்ற பெரு மாநகராட்சியில் உள்ள தியேட்டர்களிலேயே பல நாட்கள் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதைப் பார்க்க முடிந்தது.
கடைசியாக ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'கூலி' திரைப்படம் சில நாட்கள் வசூலைத் தந்தது. அதற்கடுத்து சிவகார்த்திகேயன் நடித்த 'மதராஸி' படம் ஓரளவிற்கு வசூலித்தது. ஆனால், அந்த இரண்டு படங்களும் எவ்வளவு லாபத்தைத் தந்தன என்பதைக் கேட்டால் தியேட்டர்காரர்களே தயங்குகிறார்கள். அந்த அளவிற்கு சொல்லிக் கொள்ளும்படியான லாபம் இல்லை என்கிறார்கள்.
கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வந்த 'வசூல் வறட்சி'யை கடந்த வாரம் வெளிவந்த தீபாவளிப் படங்களான 'பைசன், டியுட்' ஓரளவிற்கு சமாளித்துள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அந்தப் படங்களுக்கு அதிகம் வந்துள்ளனர். தற்போதைய சூழலில் அவர்கள்தான் தியேட்டர்களுக்கு அதிகமாக வருகிறார்கள். குடும்பத்தினர், சற்றே வயதானவர்கள் ஓடிடியில் படங்கள் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என தியேட்டர்கள் பக்கம் வருவதில்லை.
'பைசன், டியூட்' தியேட்டர் வசூலில் குறிப்பிடத்தக்க லாபத்தை நிச்சயம் தரும் என்ற நம்பிக்கையில் தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.