ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களின் உரிமம் சோனி நிறுவனத்திடம் உள்ளது. இந்த உரிமத்தை சோனி நிறுவனம் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் எக்கோ நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போதைய படங்களில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துகிறவர்கள் சோனி நிறுவனத்திடம் உரிமம் பெற்று பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மீது இளையராஜா தொடர்ந்து வழக்கு தொடர்ந்து வருகிறார்.
சோனி நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், சோனி நிறுவனம் என் பாடல்களை மாற்றியும், பல்வேறு வடிவங்களிலும் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவேளை எக்கோ நிறுவனத்திடம் இருந்து இந்த பாடலுக்கான உரிமம் பெற்றதாக சோனி நிறுவனம் கூறினால், எக்கோ நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு அமலில்தான் உள்ளது. என் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும் என் பாடல்களை பயன்படுத்தி சோனி நிறுவனம் ஈட்டிய வருவாய் விவரங்களையும் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இளையராஜா பாடல்களை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் குறித்த விவரங்களை சோனி நிறுவனம் அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் சோனி நிறுவனம் சீல் வைக்கப்பட்ட கவரில் வருமான விவரங்களை தாக்கல் செய்தது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை நவ., 19ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
டியூட் படக்குழு மீதும் வழக்கு பாய்கிறது
மேலும் இன்றைய விசாரணையின் போது கடந்தவாரம் வெளியான ‛டியூட்' படத்திலும் இளையராஜாவின் ‛கருத்த மச்சான்...' உள்ளிட்ட இரு பாடல்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக இளையராஜா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றம், வேண்டுமானால் இதுதொடர்பாக நீங்கள் தனியாக வழக்கு தொடரலாம் என அறிவுறுத்தியது. இதனால் டியூட் படத்தின் மீதும் இளையராஜா தரப்பினர் வழக்கு தொடரலாம் என கூறப்படுகிறது.
டியூட் படத்தை தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் தான் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தையும் தயாரித்தது. இதிலும் இளையராஜாவின் மூன்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக இளையராஜா தரப்பு வழக்கு தொடர, பின்னர் அந்த பாடல்கள் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.