ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

ஹேஷ்டேக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், திரவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மெல்லிசை'. கிஷோர் குமார் மற்றும் புதுமுகம் தனன்யா நடிக்கின்றனர். கிஷோருக்கு ஜோடியாக சுபத்ரா ராபர்ட் கதாநாயகியாக நடிக்கிறார். ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், மற்றும் கண்ணன் பாரதி நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது, "காதல், லட்சியம், தோல்வி, மீட்பு ஆகிய உணர்வுகளை 'மெல்லிசை' பேசுகிறது. இதனூடாக தந்தை மகளுக்கு இடையிலான உறவையும் பேசுகிறது. அனைத்து தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில், 'அன்பு மட்டும் அண்டம் தேடும்' என்ற டேக்லைனையும் கதையையும் கொண்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெற்றிமாறன் வெளியிட்டது எங்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது" என்றார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வெற்றி மாறன், "முதல் பார்வை போஸ்டரில் கிஷோர் இளைமையாக இருக்கிறார். 'அன்பு மட்டும் அண்டம் தேடும்' என்ற டேக்லைன் படத்தின் கருவை சரியாக பிரதிபலிக்கிறது. 'மெல்லிசை' படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றார்.