டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

ரப் நோட் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ராஜ் தருண்பால் ஹீரோவாகவும், முக்கிய வேடத்தில் ஆரி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.
இப்போது இவர்களுடன் நடிகை அம்மு அபிராமியும், ‛பசங்க' புகழ் கிஷோரும் இணைந்திருக்கிறார்கள். இருவரும், விஜய் மில்டன் இயக்கிய 'கோலி சோடா ரைசிங்' வெப் சீரிஸில் இணைந்து நடித்தனர். இப்போது இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
இதுகுறித்து விஜய் மில்டன் கூறும்போது "அம்முவும், கிஷோரும் தங்கள் கதாபாத்திரங்களை உண்மையின் அடிப்படையில் அற்புதமாக காட்டக்கூடிய திறமை கொண்டவர்கள். அவர்கள் நடிப்பது மட்டுமல்ல, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்கிறார்கள். அவர்கள் இந்தப் படத்துக்கு தரும் உயிர் துடிப்பை ரசிகர்கள் விரைவில் அனுபவிக்க இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார்.