தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
ஒளிப்பதிவாளர், இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் 'மழை பிடிக்காத மனிதன்'. கடந்த வருடம் ஆகஸ்ட் 2ம் தேதி இந்தப் படம் வெளிவந்தது. இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, விஜய் ஆண்டனி, சரத்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பையும், வெற்றியையும் பெறவில்லை.
படம் வெளியான போதே ஒரு சர்ச்சை எழுந்தது. படத்தின் ஆரம்பத்தில் இடம் பெற்ற ஒரு நிமிடம் ஓடக் கூடிய அறிமுகக் காட்சி ஒன்று தனக்குத் தெரியாமல் படத்தில் சேர்த்துள்ளதாக படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் அப்போது குற்றம் சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அந்த அறிமுகக் காட்சி நீக்கப்பட்டது.
அந்தக் காட்சியை படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி சேர்த்தாரா அல்லது தயாரிப்பாளர்கள் சேர்த்தார்களா என்ற சர்ச்சை எழுந்தது. சில நாட்களில் அது நீக்கப்பட்டதாலும், படமும் தியேட்டர்களில் ஓடாததாலும் சர்ச்சையும் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு அந்த சர்ச்சையை மீண்டும் நினைவூட்டியுள்ளார் இயக்குனர் விஜய் மில்டன். 'ராஞ்சனா' படத்தின் ரீ-ரிலீஸில் ஏஐ மூலம் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையை மறுபதிவு செய்து, “மழை பிடிக்காத மனிதன்' படத்திற்கும் இதுதான் நடந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.