சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ | காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் |

வித்தியாசமான கதைகளை தேடி தேடி நடித்து வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. பன்முக திறமைக் கொண்ட இவர், முழுக்க முழுக்க நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மெட்ரோ படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் 'கோடியில் ஒருவன்' படத்தில் நடித்து இருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.
'விடியும் முன்' என்ற படத்தை இயக்கிய பாலாஜி இயக்கத்தில் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி இணையவுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க நடிகை ரித்திகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரித்திகா சிங், மாதவனுடன் 'இறுதிச்சுற்று', அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.




