இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கடந்த 1992-ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 'செம்பருத்தி' படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ரோஜா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார் ரோஜா. 2002-ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி - ரோஜா திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நடிப்பைத் தாண்டி அரசியலில் நுழைந்த ரோஜா, 2014-ம் ஆண்டு ஆந்திராவின் நகரி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக இருக்கும் ரோஜா தனது கணவர், குழந்தைகளுடன் மகனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஆர்.கே.செல்வமணி - ரோஜா தம்பதியின் மகன் கவுசிக்கிற்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி மகனின் பிறந்தநாளை நடிகை ரோஜா கோலாகலமாக கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ரோஜா வெளியிட்டுள்ளார். ரோஜாவின் மகனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.