'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து விஜய் சேதுபதியின் 'நானும் ரவுடிதான்', சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார். இவர் இயக்கத்தில் தற்போது 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் உருவாகி வருகிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர். இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள், நயன்தாரா குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பினர். அவை அனைத்திற்கும் விக்னேஷ் சிவன் பதிலளித்தார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர், குழந்தையை எதிர்பார்க்கலாமா என்று கேட்டார். அதற்கு ‛‛குழந்தை பெற்றுக் கொள்வது உங்களின் பார்ட்னர் மற்றும் உங்களுடைய முடிவுகளை பொறுத்தது'' என்று பதில் அளித்தார் விக்னேஷ் சிவன். ரசிகர்கள் நயன்தாராவின் புகைப்படங்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்க அவரும் அப்படியே செய்தார். அதனால் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிலும் குறிப்பாக நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் செல்பியை விக்னேஷ் சிவன் வெளியிட்டார். அந்த படம் வைரலாகி வருகிறது.




