மார்ச் 2026 : 21 படங்களில் ஒரே ஒரு படம்தான் வெற்றி… | தனுஷ் உடனான பிரிவு ஏன்? விக்னேஷ் சிவன் பதில் | துரந்தர் -2 படத்தை அடுத்து ஷோம்பி திரில்லர் கதையில் நடிக்கும் ரன்வீர் சிங்! | வைரலாகி வரும் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' டிரைலர் | ராஷ்மிகாவின் 30வது பிறந்தநாளில் வெளியான 'மைஸா' படத்தின் அதிரடி போஸ்டர்! | 'மீசைய முறுக்கு 2' இரண்டாம் பாடல் ஏப்.8ல் வெளியாகிறது! | 'நூறு சாமி' படத்தின் டீசர் வெளியானது! | 'மிஸ்டர். எக்ஸ்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் மற்றும் டிஜிட்டல்,சாட்டிலைட் உரிமை விவரங்கள்! | அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளர் ஆக ஏ.ஆர். ரஹ்மான்! | ஏப்.17ல் விக்ரமின் அடுத்த பட அறிவிப்பு! |

மங்காத்தா, ஜில்லா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான வேடத்தில் நடித்தவர் மஹத் ராகவேந்திரா . ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மஹத் புதிய படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார்.
அதன்படி, தமிழ் சினிமாவில் முக்கியமான தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இவர் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குனர் உள்ளிட்ட மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல், விஜயகாந்த், முரளி, அஜித், தனுஷ் போன்ற முக்கியமான நடிகர்களின் படங்களை தயாரித்த நிறுவனம் இதுவாகும். இப்போது மஹத் படத்தை தயாரிக்கின்றனர். இதற்கிடையில், மஹத் தற்போது தெலுங்கு மொழியில் உருவாகும் "பகாசல பந்தம்" என்ற படத்தில் பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தில் மஹத், ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்பட முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.