ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தியேட்டர்களை முற்றுகையிட்ட நாம் தமிழ் கட்சியினர் கைது செய்யபட்டனர்.
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் தெலுங்கில் உருவாகி, தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளில் டப்பிங் ஆகி ரிலீஸ் செய்யப்பட்டுள்ள படம் ‛கிங்டம்'. இந்த படத்தின் கதை இலங்கையில் நடைபெறுவது போன்று உள்ளது. இந்நிலையில் இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல் இந்த படம் சித்தரிப்பதாகவும், அங்குள்ள மலையகத் தமிழர்களை இலங்கை தமிழர்கள் ஒடுக்கினார்கள் என்பது போன்று காட்சிகள் இருப்பதாக கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார். 'கிங்டம்' படத்தை தமிழகத்தில் திரையிட்டால் தியேட்டர்களை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று(ஆக., 5) தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ‛கிங்டம்' படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். சில ஊர்களில் தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த அந்த படத்தின் போஸ்டர், பேனர்களை கிழித்தனர். தியேட்டர்களில் ஏற்கனவே சில ஊர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோவை, ராமாநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.




