பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‛கிங்டம்'. இதில் இலங்கை தமிழர்களை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நேற்று பல ஊர்களில் இந்தபடம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் பலர் கைதும் செய்யப்பட்டனர். இந்த படத்திற்கு பாதுகாப்பு கேட்டு படக்குழு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இப்பட நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‛‛தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். இந்தக்கதை கற்பனையானது என படத்தின் கார்டில் குறிப்பிட்டுள்ளோம். அதையும் மீறி மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறோம். கிங்டம் படத்திற்கு ஆதரவு தாருங்கள்'' என தெரிவித்துள்ளனர்.