சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள மதராஸி படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்து சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இதில், மதராஸி படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. தான் அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது பல அழுத்தத்தை போக்கும் அருமருந்தாக தனது பிள்ளைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அது குறித்து அவர் கூறுகையில், ‛‛என்னுடைய மகள், இரண்டு மகன்கள் என மூன்று பிள்ளைகளையும் எனது மனைவிதான் முழுமையாக கவனித்துக் கொள்கிறார். அவருக்குத்தான் அவர்களை கவனித்துக் கொள்வதில் எவ்வளவு சிரமம் என்பது தெரியும். அதோடு நான் படப்பிடிப்பு தளங்களில் மன அழுத்தம் ஏற்பட்டு வீட்டுக்கு செல்லும்போது என்னுடைய பிள்ளைகள் தான் அந்த அழுத்தத்தை போக்கி எனக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியை கொடுக்கிறார்கள். அவர்களுடன் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்து விட்டாலே என் மன அழுத்தம் எல்லாம் மாயமாகிவிடும்'' என்கிறார் சிவகார்த்திகேயன்.