சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
இயக்குனர் கவுதம் தின்னனூரி இயக்கத்தில் வெளியான 'ஜெர்ஸி' படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்து அவர் நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் கைவிடப்பட்டது. இதையடுத்து கவுதம் தற்போது விஜய் தேவரகொண்டாவை வைத்து 'கிங்டம்' படத்தை இயக்கினார். 'கிங்டம்' படம் வெளியான சில நாட்களில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
கவுதம் தின்னனூரி அளித்த பேட்டியில் ராம் சரண் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது," ஜெர்ஸி படத்திற்கு பிறகு ராம்சரணிடம் புதிய கதையொன்றை கூறினேன். அவருக்கு பிடித்திருந்தது. அதன் பின்னர் அந்த கதையினை முழுமையான திரைக்கதையாக எழுதினேன். அது ராம்சரணுக்கு பொருத்தமாக இருக்காது என்பதை உணர்ந்தேன். ராம்சரண் போன்ற ஒரு நட்சத்திர நடிகரை இயக்குவது ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. அதை ஏனோ தானோ என்று இயக்க விரும்பவில்லை. இது குறித்து அவரிடமும் கூறினேன். அதன் பின்னர் இருவரும் சரியான கதை அமையும் போது இணைந்து பணிபுரிய முடிவு செய்தோம்” என தெரிவித்துள்ளார்.