பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'கூலி'. இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ந் தேதியன்று திரைக்கு வருவதை முன்னிட்டு லோகேஷ் பேட்டி அளித்து வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜிடம் பராசக்தி படத்தில் நடிக்காதது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அவர் கூறியதாவது, “ கடந்த மூன்று வருடங்களாக நிறைய நண்பர்கள் என்னை படங்களில் நடிக்க வைக்க அணுகினார்கள். சமீபத்தில் 'பராசக்தி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினார்கள். சுதா கொங்காரா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அனைவருமே நம்பி வாங்க பண்ணலாம் என்றார்கள். அந்தக் கதையும் ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால், கூலி படத்தின் பணிகள் பாதிப்படையும் என்பதால் நடிக்க முடியவில்லை. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.