தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது |

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'பராசக்தி'. இப்படத்தை 1965ம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த ஹிந்தி திணிப்பு கதையை மையப்படுத்தி உருவாக்கியுள்ளனர்.
இப்படம் முதலில் பொங்கல் பண்டிகையையொட்டி 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியிடுவதாக அறிவித்தனர். பின்னர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜன.,10ம் தேதியே வெளியிடுவதாக அறிவித்தனர்.
ஜன.,9ல் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் வெளியாகும் நிலையில், அடுத்த நாளே 'பராசக்தி' வெளியாவதால் கடும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையே ஜனநாயகன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, மலேசியாவில் டிச.,27ம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. அது முடிந்ததும் பராசக்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா எப்போது என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், ஜனவரி 3ம் தேதியன்று சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை நமது தினமலர் இணையதளத்தில் டிச.,28ம் தேதியே செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..
ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழாவில் அதன் இயக்குனர் எச்.வினோத், ''ஜனநாயகன் படம் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கே, நடுவுல புகுந்து அடிச்சிரலாம்னு யோசிக்கிறங்வங்களுக்கு ஒன்னு சொல்றேன். ஐயா, இது தளபதி படம். உங்க மைண்ட்ல இருக்குற எண்ணங்களையெல்லாம் அழிச்சிருங்க'' என பராசக்தி வெளியீட்டை மறைமுகமாக பேசியிருந்தார். அதுபோல, பராசக்தி பாடல் விழாவிலும் ஜனநாயகன் படத்துடன் போட்டியிடுவது குறித்து பேசுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.