பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படத்தில் பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள், 75 காலமானார்.
கார்த்தி, பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன் நடிப்பில் அமீர் இயக்கத்தில் வெளியான படம் ‛பருத்திவீரன்'. கார்த்தியின் அறிமுக படம் இது. இந்த படத்திற்காக தான் தேசிய விருது வென்றார் பிரியாமணி. மதுரை பின்னணியில் வெளியான இப்படம் வரவேற்பை பெற்றது. யுவன் இசையமைத்து இருந்தார்.
இந்த படத்தில் "ஊரோரம் புளியமரம்" என்ற பாடல் பிரபலம். இந்த பாடலை பாடி, அந்த பாடலில் நடித்தவர் லட்சுமி அம்மாள். இவர் கிராமிய பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்த இவர், வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலை காலமானார்.