பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
அமீர் இயக்கத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் பருத்திவீரன். இந்தப் படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. பொன்வண்ணன், சரவணன் கஞ்சா கருப்பு, உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இவர்கள் தவிர மண்சார்ந்த பல புதிய முகங்களும் நடித்தார்கள். கார்த்தியின் அப்பத்தாவாக நடித்தவர் பஞ்சவர்ணம். கிராமிய பாடகியாகவும், கலைக்குழு கலைஞராகவும் இருந்தவர். பருத்திவீரன் படத்திற்கு பிறகு மேலும் சில படங்களில் நடித்தார்.
74 வயதான பஞ்சவர்ணம் முதுமை காரணமாக நேற்று காலமானார். அவருக்கு நடிகர் கார்த்தி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.