சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருகிறவர் பாலசரவணன். குட்டிப்புலி படத்தில் அறிமுகமான இவர், அதன்பிறகு பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், டார்லிங், வேதாளம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், கொடிவீரன், உள்குத்து, ஈஸ்வரன், களத்தில் சந்திப்போம் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மதுரையில் வசித்து வந்த இவரின் தங்கையின் கணவர் இருதினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பாலசரவணன் டுவிட்டரில், ‛‛அன்பு நண்பர்களே. எனது தங்கையின் கணவர் கரோனா காரணமாக இறந்துவிட்டார். 32 வயது. தயவு கூர்ந்து மிகக் கவனமாக இருக்கவும். நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம். நம்மைப் பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும். தயவு செய்து முக கவசம் அணியுங்கள்'' என தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.