'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் கார்த்தி நடித்துள்ள 25வது படமான 'ஜப்பான்' படம் நாளை வெளியாக உள்ளது. கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான 'பருத்தி வீரன்' படம் 2007ம் ஆண்டு வெளிவந்தது. கடந்த 17 ஆண்டுகளில் கார்த்தி 25 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
'ஜப்பான்' படத்திற்கான டிரைலர் வெளியீட்டு விழாவுடன் சேர்ந்து 'கார்த்தி 25' விழாவையும் சமீபத்தில் சென்னையில் நடத்தினார்கள். அதில் கார்த்தியை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் அமீர் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதென்று சொல்லப்பட்டது. ஆனால், அப்படி எந்த அழைப்பும் வரவில்லை என அமீர் மறுத்திருந்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அது குறித்து பேசும் போது 'பருத்தி வீரன்' படம் தொடர்பாக கடந்த பதினாறு ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கு ஒன்றைப் பற்றிய தகவலைக் கூறினார் அமீர்.
“பருத்தி வீரன் படம் சம்பந்தமாக, அந்தப் படத்தின் தயாரிப்பு சம்பந்தமாக எனக்கும் தயாரிப்பாளருக்குமான வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மை பல பேருக்குத் தெரியுமா, தெரியாதான்னு எனக்குத் தெரியலை. கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகளாக வழக்கு நடந்துக்கிட்டிருக்கு சென்னை உயர்நீதிமன்றத்துல. அந்த வழக்குக்கு நான் மட்டும் கடந்த மாசம் உட்பட போய் ஆஜராகிட்டு வந்திருக்கேன். இதுதான் நிலவரம், இந்த சூழ்நிலைல எப்படி கலந்துக்க முடியும்,” எனத் தெரிவித்திருக்கிறார்.
'பருத்தி வீரன்' படத்தைத் தயாரித்தவர் ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல். அவர் சூர்யா, கார்த்தி ஆகியோரது உறவினர். அந்த படத்திற்காக தயாரிப்பாளர் தரப்பில் குறிப்பிட்ட பட்ஜெட்டில் படத்தைத் தயாரித்து முடிக்கச் சொல்லியிருந்தார்கள். ஆனால், அமீர் கொடுத்த பட்ஜெட் அதைவிட இரண்டு மடங்காகியது. அதன் காரணமாக அப்போதே பிரச்னைகள், பேச்சுவார்த்தைகள், பஞ்சாயத்துகள் நடந்து முடிந்தது. அதன்பின் சூர்யா குடும்பத்தினருக்கும், அமீருக்கு நல்லுறவு கிடையாது.
இந்நிலையில் 'கார்த்தி 25' நிகழ்வில் அமீர் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஆரம்பித்து வைத்தது. தனது இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள 'வாடி வாசல்' படத்தில் அமீர் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார் வெற்றிமாறன். இப்போது கார்த்தி, அமீர் இடையிலான சர்ச்சையை ஆரம்பித்தால் அது 'வாடி வாசல்' படத்தில் அமீர் நடிப்பதற்கும் ஒரு சிக்கலை ஏற்படுத்தலாம். இது எங்கே போய் முடியப் போகிறது என்பது தெரியவில்லை.