'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

ஆர்யா நடித்துள்ள வெப் தொடர் 'தி வில்லேஜ்'. இதில் அவருடன் திவ்யா பிள்ளை, அலீயா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பூஜா ராமச்சந்திரன், முத்துக்குமார், கலைராணி, ஜான் கோக்கன், வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், மற்றும் தலைவாசல் விஜய் உட்பட பலர் நடித்துள்ளார். மிலிந்த்ராவ் இயக்கி உள்ளார்.
தனது குடும்பத்தை ஆபத்திலிருந்து மீட்டு காப்பாற்றுவதற்காக ஒரு சாகச பயணத்தை மேற்கொள்ளும் ஒரு மனிதனை சுற்றி இந்த கதை சுழல்கிறது. பேண்டசி கலந்த த்ரில்லர் தொடராக உருவாகி உள்ளது. மிலிந்த் ராவ், தீராஜ் வைத்தி, மற்றும் தீப்தி கோவிந்தராஜன் ஆகியோர் இதன் திரைக்கதையை எழுதி உள்ளனர். ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் சார்பாக பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
இந்த தொடர் வருகிற 24ம் தேதி தமிழில் வெளியாவதோடு தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் சப்டைட்டில்களுடன் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.




