பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு |

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'தாய் கிழவி' படத்தை சிவகுமார் முருகேசன் என்பவர் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் தான் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர். இந்த படத்திற்கான ஒரு புரொமோ வீடியோவிற்கான படப்பிடிப்பை இவ்வாரத்தில் மதுரையில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
'நம்ம வீட்டு பிள்ளை' படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் கிராமத்து கதையம்சம் கொண்ட நாயகனாக நடிக்கவுள்ளார். குறிப்பாக இப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு 'விருமாண்டி' படமாக அமையும் என்கிறார்கள். இப்போது இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை புரொமோ வீடியோ உடன் வருகின்ற பிப்ரவரி 17ம் தேதியன்று சிவகார்த்திகேயனின் 41வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்கிறார்கள்.
தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல மலையாள நடிகர் ஆன திலீப் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திலீப், நடிகை பாலியல் வழக்கில் சட்டப்பூர்வமாக நிரபராதி ஆக வெளிவந்தாலும் அவர் மீது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வருத்தம் உள்ளது. இது அந்த படத்தை பாதிக்க வாய்ப்புள்ளது என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.