ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் வாழ்வியல் கலந்த அழகான காதல் கதையாக உருவாகியுள்ள படம் 'அந்தோனி'. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் சீனு ராமசாமி, 'சிறை' திரைப்படக் கதையாசிரியர் தமிழ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். 'அந்தோனி' படத்தின் முதல் பார்வை மற்றும் சில டிரைலர் காட்சிகள், நடிகர் துல்கர் சல்மானுக்குக் காண்பிக்கப்பட, அவர் படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.
'அந்தோனி' படத்தை ஜெனோசன் மற்றும் சுகிர்தன் ஆகிய இரு அறிமுக இயக்குநர்கள் எழுதி இயக்கியுள்ளார்கள். இது இலங்கையில் உருவாகும் தமிழ் படம். இவர்கள் இருவரும் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் ஸ்டோன் பென்ச் கம்பனியிலும் மற்றும் சில திரைப்படங்களிலும் உதவி இயக்குனர்ர்களாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். இலங்கை சென்று இந்த படத்தை எடுத்து இருக்கிறார்கள். காயல் வின்சென்ட் ஹீரோ, டி.ஜே.பானு, சுதர்ஷன், சவுமி, அருள்தாஸ், நிழல்கள் ரவி, ஆண்டவன் கட்டளை அரவிந்தன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நெய்தல் நிலப் பின்னணியில் கடல் வாழ்வியல், காதல், குடும்ப வாழ்வுடன், ஆழமான உணர்வுகளையும் இணைத்து, இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் மற்றும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போருக்குப் பின்னரான மக்கள் வாழ்க்கையின் சாரம் கொண்ட திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.