சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் | விஜய்சேதுபதி சொன்ன சைக்கிள் கதை |
நாட்டுப்புற பாடகர் அந்தோணிதாசன். சின்னத்திரை மூலம் நாடறிந்த அவர், பின்னர் சினிமாவில் பாடகர் ஆனார். 'சூதுகவ்வும்', 'காக்கி சட்டை', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'குக்கூ', 'ரோமியோ ஜூலியட்', 'சிகரம் தொடு', 'ஜிகர்தண்டா', 'ஆம்பள', 'தானா சேர்ந்த கூட்டம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட படங்களின் பாடல்கள் உள்பட, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 378 பாடல்கள் பாடி உள்ளார்.'எம்.ஜி.ஆர் மகன்', 'அம்பு நாடு ஒம்பது குப்பம்' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சில படங்களில் பாடல் காட்சியிலும் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ள அந்தோணிதாசன் தற்போது 'தல போச்சே' என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதுதவிர 'இடி முழக்கம்', 'வைரி' ஆகிய படங்களிலும் நடிக்கிறார். 'ஆசை மச்சான்' என்ற இசை ஆல்பத்தை சமீபத்தில் வெளியிட்டு உள்ளார். அடுத்து சுதந்திர தினத்தில் வெளியிட 'வந்தே மாதரம்' என்ற பாடல் ஆல்பத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் பாடல் ஆல்பத்துக்கான படப்பிடிப்பை ஐவகை நிலங்களில் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.