நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

'கோவா' படத்தை தயாரித்த ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா இப்போது 'வித் லவ்' படத்தை தயாரிக்கிறார். மதன் இயக்க 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோ ஆகிறார். பிரபல மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் ஹீரோயின். பிப்ரவரி 6ம் தேதி படம் ரிலீசாகிறது.
சென்னையில் நடந்த விழாவில் சவுந்தர்யா பேசுகையில், ''கோவா படத்தை தயாரித்தேன். 16 ஆண்டுகள் ஓடிவிட்டது. வேறு வேலைகள் காரணமாக படத்தயாரிப்பில் ஈடுபடவில்லை. சினிமாவில் வெற்றி, தோல்வி என நிறைய பார்த்துவிட்டேன். இப்போது மீண்டும் தீவிரமாக படத்தயாரிப்பில் இறங்கிவிட்டேன். இனி இது தொடரும். வித் லவ் படத்தில் கதை அனைவருக்கும் பிடிக்கும்.
என் மகன் வேத் சினிமாவுக்கு வருவான். அது கண்டிப்பாக நடக்கும். டூரிஸ்ட் பேமிலி படத்தின் இணை இயக்குனர் மதன் இந்த படத்தை இயக்குகிறார். அதேபோல் இந்த படத்தில் பணியாற்றியவர்கள் என்னிடம் கதை சொல்ல வரலாம். இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இந்த விழாவுக்கு வந்துள்ளார். அவர் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். அவருக்கு நிறைய பொறுப்பு உள்ளது. ஹீரோயின் அனஸ்வராவுக்கு நான் அக்கா மாதிரி. ஹீரோ அபிஷன் ஜீவிந்த்துக்கு இந்த படம் வெற்றி படமாக அமையும். நானும் இந்த படக்குழுவில் இருந்து அதிகம் கற்றுக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.