ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

தெலுங்கு திரை உலகில் மசாலா படங்களில் மட்டுமே நடித்து ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ரவி தேஜா. அவரது நடிப்பில் அடுத்ததாக 'இருமுடி' என்கிற படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. அப்போது வெளியிடப்பட்ட அந்த படத்தின் போஸ்டரில் ரவி தேஜா ஐயப்ப பக்தர் தோற்றத்தில் இருமுடி சுமந்தவாறு தனது கையில் ஒரு குழந்தையை தூக்கியபடி இருப்பது போன்று காணப்பட்டது. தந்தை மகளுக்கான பாசப்பிணைப்பு குறித்து அதன் பின்னணியில் இந்த படம் உருவாவதாக சொல்லப்படுகிறது.
அதே சமயம் இந்த ஐயப்ப பக்தர் கெட்டப் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை சோசியல் மீடியாவில் சொல்லி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் இயக்குனர் சிவா நிர்வானா பேசும்போது, “இந்த படத்தில் சபரிமலையும் ரவி தேஜாவின் ஐயப்ப பக்தர் கதாபாத்திரமும் படத்தின் ஒரு பகுதியாக தான் வருகின்றன. பொதுவாகவே நமக்கு ஐயப்ப சுவாமி சென்டிமென்ட் ரொம்பவே இருக்கும். படத்தின் கதை ஓட்டத்தில் இந்த கதாபாத்திரமும் அப்படி ஒரு ஐயப்ப பக்தராக சில காட்சிகளில் இடம்பெறுகிறது. மற்றபடி கதை பயணிக்கும் களம் வேறு” என்று கூறியுள்ளார்.




