பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

2026ம் ஆண்டு நேற்று இனிதே பிறந்தது. வழக்கம் போல இந்த புது வருடத்தை அனைவரும் ஆவலுடன் வரவேற்றுள்ளனர். போகப் போகத்தான் இந்த வருடம் எப்படி இருக்கப் போகிறது என்பது தெரிய வரும். வழக்கம் போல நேற்றைய புத்தாண்டு நன்னாளில் பல தமிழ்ப் படங்களின் அப்டேட்களை வெளியிட்டார்கள். புது வருட வாழ்த்துகளைத் தெரிவித்து பல புதிய போஸ்டர்கள் வெளியானது.
“டிமாண்டி காலனி 3, டபுள் கேம், இதயம் முரளி, கடற்கரை பட்டிணம், கருப்பு, மாய பிம்பம், மகுடம், மனிதன் தெய்வமாகாலாம், நிறம், பூக்கி, ரூட், செவல காள, ஸ்வயம்பு, டிரைன், தலைவர் தம்பி தலைமையில், வாத்தியார் குப்பம் 2, வட மஞ்சுவிரட்டு, வங்காள விரிகுடா, வித் லவ்”, உள்ளிட்ட படங்களின் போஸ்டர்களை அந்தந்த அப்டேட்களுடன் வெளியிட்டார்கள். இவற்றில் சில படங்கள் விரைவில் வெளியாக உள்ளன, சில படங்கள் படப்பிடிப்பில் இருக்கின்றன.
புத்தாண்டுக்குப் பிறகு இரண்டு வாரத்தில் வர உள்ள பொங்கல் நன்னாளிலும் இது போல மீண்டும் சில பல புதிய படங்களின் அப்டேட்கள் வெளியாவது உறுதி.