சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 10 முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே வெளியாகிறது. இரண்டாம் நிலை நடிகர்கள், வளரும் நடிகர்களின் படங்கள் என்று மொத்தமாக சேர்த்தால் 25 படங்கள் வரை தேறும். எஞ்சியுள்ள படங்கள் அனைத்துமே சிறிய படங்கள்தான்.
உதாரணத்திற்கு கடந்த 2025ம் வருடம் வெளிவந்த 280 படங்களில் 250க்கும் மேற்பட்ட படங்கள் சிறிய படங்கள்தான். ஆனால், அந்தப் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் இருக்கிறது. 50க்கும் குறைவான தியேட்டர்களில், அதைவிட குறைவான காட்சிகளில் வெளியாகும் படங்கள்தான் அதிகம்.
இந்த புதிய ஆண்டில் அந்த பிரச்சனையை திரையுலகில் உள்ள முக்கிய சங்கங்கள் தீர்த்து வைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. 27 தியேட்டர்கள், அதிலும் ஒரே ஒரு காட்சிகள் என ஒதுக்கியதால் தியேட்டர்களை எதிர்த்து 'சல்லியர்கள்' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
இன்று தியேட்டர்களில் 6 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றின் நிலை என்ன என்பதை ஆன்லைன் இணையதளங்கள் மூலம் சென்று பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். ஒரே ஒரு முக்கிய ஆன்லைன் தளத்தின், சென்னை மாநகரின், இன்றைய நிலவரம் என்ன என்பதை இங்கு பகிர்கிறோம்.
'ஜஸ்டிஸ் பார் ஜெனி' படத்திற்கு சென்னையில் 9 தியேட்டர்களில் 8 தியேட்டர்களில் ஒரே ஒரு காட்சியும், ஒரு தியேட்டரில் 2 காட்சிகளும் கிடைத்துள்ளன.
'காக்கா' படத்திற்கு 14 தியேட்டர்களில் 12 தியேட்டர்களில் ஒரே ஒரு காட்சியும் இரண்டு தியேட்டர்களில் 2 காட்சிகளும் உள்ளன.
'தி பெட்' படத்திற்கு 14 தியேட்டர்களில் 13 தியேட்டர்களில் ஒரே ஒரு காட்சியும், ஒரு தியேட்டரில் 2 காட்சிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
'டியர் ரதி' படம் 16 தியேட்டர்களில் ஒரே ஒரு காட்சியில் திரையிடப்படுகிறது.
'அனலி' படம் 9 தியேட்டர்களில் வெளியாகி, 8 தியேட்டர்களில் ஒரே ஒரு காட்சியும், ஒரு தியேட்டரில் 2 காட்சிகளும் திரையிடப்படுகிறது.
இந்த குறிப்பிட்ட ஆன்லைன் இணையதளத்தில் 'மாமகுடம்' படத்திற்கான தியேட்டர்கள் எதுவும் இடம் பெறவில்லை.
இந்த வருடத்தின் முதல் வெளியீடாக இன்று வெளியாகி உள்ள 6 நேரடி தமிழ்ப் படங்களின் நிலை இதுதான். இது நாளை, நாளை மறுதினத்தில் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரவில்லை எனச் சொல்லி இந்தப் படங்களில் சில படங்களை இன்றே தியேட்டர்களை விட்டு தூக்கும் நிலையும் வரலாம்.
இந்த சிறிய படங்களுக்கான தியேட்டர் கட்டணம் என்பதும் முன்னணி நடிகர்களின் படங்களுக்காகக் கொடுக்கப்படும் அதே கட்டணம்தான். இந்த சிறிய படங்களுக்கும் மக்கள் வரவேண்டும் என்றால் இதற்கான கட்டணம் முன்னணி நடிகர்களின் கட்டணங்களை விடவும் குறைவாக இருக்க வேண்டும். உதாரணமாக குறைந்தபட்ச கட்டணமாக ரூ.100 கூட வசூலிக்கலாம். அப்படி ஏதாவது மாற்றம் செய்தால் மட்டுமே இப்படியான சிறிய படங்களைக் காப்பாற்ற முடியும்.