மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கடந்த 2021ம் ஆண்டில் தமிழில் ஜான் பால்ராஜ் இயக்கத்தில் வெளியான 'பிரண்ட்ஷிப்' என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் கமர்ஷியல் ஆக தோல்வி பெற்றாலும், ஓடிடி இல் பெரியளவில் பார்வையாளர்களை கடந்துள்ளது. அந்தவகையில் தயாரிப்பாளருக்கு லாபகரமான படமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் ஹர்பஜன் சிங் அடுத்து ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளார். அதன்படி, மீண்டும் ஜான் பால்ராஜ் இயக்கத்தில் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக புதிய தமிழ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு இரவில் நடக்க கூடிய டார்க், காமெடி, த்ரில்லர் ஜானரில் உருவாகிறது என கூறப்படுகிறது.