மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

நேற்று சென்னையில் தனியார் விருது விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பார்த்திபன் பேசும்போது சில பிரபலங்களின் போட்டோக்களை திரையில் காட்டினர்.
அப்போது அந்த திரையில் நடிகை த்ரிஷா போட்டோ வந்தபோது அவரை குறித்து கவிதை கேட்டுள்ளனர். அதற்கு பார்த்திபன் கூறியதாவது, " இந்த குந்தவையை கொஞ்ச நேரம் குந்த வைக்கிறது நல்லது. இந்த குந்தவையை வீட்டுக்குள்ளேயே வெளியே வராமல் குந்த வைக்கிறது நல்லது. அப்போது தான் நிறைய உண்டாகாமல் இருக்கும். சில கவிதைகளை ரசிக்கலாம் தவிர அந்த கவிதையை சொல்லாமல் இருப்பது பெட்டர்." என பார்த்திபன் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது கடந்த சில நாட்களாக விஜய், த்ரிஷா சம்மந்தப்பட்ட செய்திகளுக்கு மறைமுகமாக நக்கல் அடித்துள்ளார் என தெரிகிறது.