'பிரம்மயுகம்' டைரக்டரின் புதிய ஹாரர் படத்தில் நடிக்கும் பிரித்விராஜ்-மஞ்சு வாரியர் | என்னிடம் கேட்காமலேயே கதையை மாற்றி விட்டார் ; வரலட்சுமி மீது 'சரஸ்வதி' பட கதாசிரியர் குற்றச்சாட்டு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் | 3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் கருத்து | கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் | ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது | பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் | பிளாஷ்பேக்: தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணித்த கதை சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது | லோக்கல் டைம்ஸ்: 13ம் தேதி வெளியாகும் புதிய வெப் சீரிஸ் | கலையரசனின் 'கொலைச்சேவல்' 13ம் தேதி ரிலீஸ் |

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'இந்தியன் 2, கேம் சேஞ்சர்' ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவியது. தற்போது ஷங்கர் மிகப்பெரிய வெற்றி படத்தை தரவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதனால் ஷங்கரின் கனவுப்படமான 'வேள்பாரி'யை அடுத்து உருவாக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் உள்ளார் ஷங்கர்.
'இந்தியன் 2' தோல்வியால் 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த 'இந்தியன் 3' கிடப்பில் போடப்பட்டது. ஒருவேளை வேள்பாரி படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு 'இந்தியன் 3' படப்பிடிப்பு முடித்து தரவேண்டும் என லைகா நிறுவனம் வந்து நின்றால் என்ன பண்ணுவது என்பதை சிந்தித்து இப்போது லைகா நிறுவனத்திடம் 'இந்தியன் 3' படப்பிடிப்பை நான் முடித்து தரவேண்டும் என்றால் மூன்று மாதங்கள் கால அவகாசம். அதற்குள் நீங்கள் ஏற்பாடு செய்தால் நான் மீதமுள்ள படப்பிடிப்பை முடித்து தருகிறேன். இல்லையெனில் 'வேள்பாரி' படத்தை முடித்து பிறகு தான் வர முடியும் என தெளிவாக கூறியுள்ளார் என தகவல் பரவி வருகிறது.