'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

கேந்திரன் இயக்கத்தில் விமல் நடிக்கும் வடம் படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகிறது. படம் குறித்து விமல் பேசியது : ''என்னிடம் சொன்ன கதையை அப்படியே எடுக்க முடியமா என்று இயக்குனரிடம் கேட்டேன். காரணம், கதை அப்படிப்பட்டது. பாண்டிமுனி என்ற மாடு முக்கியமான கேரக்டரில் வருகிறது. வடம் என்றால் ஒருவகை ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு. அதை லைவ்வாக எடுத்தோம். குற்றாலத்தில் வெளியூரில் இருந்து மாடுகளை கொண்டு வந்து, ஏகப்பட்ட நடிகர்களை வைத்து படப்பிடிப்பு நடத்தியபோது ரோபோ சங்கர் மறைந்துவிட்டார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆசைப்பட்டேன். ஆனால், 15 லட்சம் வரைக்கு வீணாகும் நிலை. அதனால் படப்பிடிப்பு தளத்திலேயே அவருக்கு அஞ்சலி செலுத்தினோம்.
என் மனைவியை அவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள அனுப்பி வைத்தேன். என் நிலை அறிந்து அந்த ஊர் மக்கள் 500 பேருக்கு ரோபோ சங்கர் நினைவாக சேலை வழங்கினார் படத்தின் தயாரிப்பாளர் ராஜசேகர். அந்த ஏரியாவில் 2000 மரக்கன்று நட்டார். இதில் ஒளிப்பதிவாளர் பிரசன்னா, அவர் டீம் உழைப்பு கடுமையானது. அவர்கள் காதில் ஹெட்செட் வேலை செய்வார்கள். நான் ஒருவரின் ஹெட்செட்டை வாங்கி என்ன பேசுகிறார்கள் என்று கேட்டேன். அதெல்லாம் வெளியில் சொல்ல முடியாத கெட்டவார்த்தைகள். அவர்கள் அனைவரும் நண்பர்கள் என்பதால் அப்படி பேசிக்கொள்வார்களாம்.
எனக்கு மாஸ் ஹீரோ எல்லாம் வேண்டாம். நல்ல மனசுள்ள ஹீரோவாக இருந்தால் போதும். ஏனெனில் என் சக்தி என்ன என்று எனக்குத் தெரியும். ஆண்டவன் என்னை இந்த அளவில் வைத்திருந்தால் போதும். நம்மை நம்பி பணம் போடும் தயாரிப்பாளருக்கு ஓரளவு லாபம் சம்பாதித்து கொடுத்தால் போதும். ஹீரோயின் பெயர் சனாஸ்கா. இந்தப் பெயரை கூப்பிடுவதெல்லாம் எனக்கு பெரிய டாஸ்காக இருக்கிறது. அவர் இந்த படத்தில் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். நட்டியுடன் நான் சண்டை காட்சியில் நடித்தபோது, நீங்க தாரளமாக அடிங்க, யோசிக்காதீங்க என்று உற்சாகம் கொடுத்தார்'' என்றார்.




