'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

விஜய்சேதுபதி, இயக்குனர் மணிகண்டன் கூட்டணிக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. இவர்கள் இணைந்து உருவாக்கிய ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி படங்களுக்கு ஏகப்பட்ட விருதுகளும், பாராட்டுகளும் கிடைத்தன. இந்நிலையில், விஜய்சேதுபதியை வைத்து மணிகண்டன் இயக்கியுள்ள வெப் சீரிஸான ‛முத்து என்கிற காட்டான்' மார்ச் 27ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக நேற்று இதன் டீசர் வெளியாகி உள்ளது. அதுவும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதில் காட்டான் என்ற கேரக்டரில் நடிக்கும் விஜய்சேதுபதி உடல் இல்லாமல் தலையுடன் திரிவதாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அது வித்தியாசமாக இருக்கிறது. நீங்க காட்டானை தேடலை, காட்டான்தான் உங்களை தேடுறாரு என்ற வசனத்துடன் டீசர் முடிகிறது. மதுரை பின்னணியில் இந்த கதை நடக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த வெப்சீரியசை மணிகண்டனே தயாரித்து இருக்கிறார்.இந்தி நடிகர் மிலிந்த்சோமன் முக்கியமான கேரக்டரில் நடித்து இருக்கிறார். மணிகண்டனின் முந்தைய படைப்புகளில் ஆக் ஷன் கிடையாது. இது ஆக் ஷன் கலந்த கதை என்று கூறப்படுகிறது




