‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் |

இப்போதெல்லாம் சிறைச் சாலைகளில் படப்பிடிப்பு நடத்துவது கடினமான ஒன்று. ஆனால் அந்த காலத்தில் சென்னை மத்திய சிறையில் ஏராளமான படங்களின் படப்பிடிப்பு நடந்துள்ளது. மேலும் சேலம், பாளையங்கோட்டை சிறைகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. டில்லி திஹார் சிறையிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் படமான ஒரே தமிழ் படம் 'மனிதனின் மறுபக்கம்'. இது சிவகுமாரின் 150வது படம். சிவகுமார் ஒரு ஓவியர் அவர் தனது மனைவி ராதாவை கொன்றுதாக சிறை சென்று விடுவார். பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால் கொலை செய்ததற்கான காரணத்தை மட்டும் சொல்ல மாட்டார்.
ராதாவின் தங்கையும், பத்திரிகையாளருமான ஜெயஸ்ரீ பெங்களூர் சிறையில் சிவகுமாரை சந்தித்து அவர் ஏன் கொலை செய்தார் என்ற கட்டுரையை வெளியிடுவார். சிவகுமார் கொலைக்கான காரணத்தை சொல்லாவிட்டாலும், சிவகுமார் ஒரு ஓவியர் அவர் தனது மனைவியை நிர்வாணமாக வரைய விரும்பினார், அதற்கு மனைவி ஒத்துக் கொள்ளததால் அவரை கொன்றார் என்று இவராகவே ஒரு காரணத்தை வெளியிடுவார்.
இதனால் உண்மை காரணத்தை சொல்வதற்காக சிறையில் இருந்து தப்பும் சிவகுமார் அடுத்து என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. கே.ரங்கராஜ் இயக்கிய இந்தப் படத்தில் சிவகுமாருடன் ராதா, ஜெயஸ்ரீ, ஜெய் கணேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்திருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
இந்த படத்தின் தலைப்பு ரஜினி பட தலைப்பு. ரஜினியை வைத்து ஒரு மாஸ் ஆக்ஷன் படம் எடுக்கும் நோக்கத்தில் கே.பாலச்சந்தர் 'மனிதனின் மறுபக்கம்' தலைப்பை பதிவு செய்திருந்தார். ஆனால் அந்த படம் ஆரம்பிக்காததால் சத்யஜோதி பிலிம்சுக்கு கொடுத்தார்.