பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

நடிகர் சிவகுமார் பொதுவாக நடிகைகளுடன் மிக நெருக்கமாக நடிக்க மாட்டார். படுக்கை அறை காட்சிகளை தவிர்ப்பார். கதைக்கு கட்டாயம் தேவைப்பட்டால் அதனை இலைமறை காயாகத்தான் படமாக்கச் சொல்வார். ஆனால் சிவகுமார் 'கற்பூரதீபம்' என்ற படத்தில் அம்பிகாவுடன் மிக நெருக்கமாக நடித்திருந்தார்.
கதைப்படி சிவகுமாருக்கு சுஜாதாவுடன் திருமணம் நடத்திருக்கும், இருவரும் மகிழ்ச்சியாக வாழும் நேரத்தில் அவரது முன்னாள் காதலி அம்பிகா அவரைத் தேடி வருகிறார். அவருக்கும் வாழ்க்கை கொடுக்க வேண்டிய கட்டாயம் சிவகுமாருக்கு.
அதனால் அவருக்கு தனியாக வீடு எடுத்து கொடுத்து சின்னவீடாக வைத்துக் கொள்வார் சிவகுமார். அம்பிகாவின் வீட்டிற்கு சென்றாலே ரொமான்ஸ்தான் இருவரும் கட்டிலில் தாரளமாக கட்டிப்பிடித்து புரள்வார்கள். 'வா... மாலை நேரம்' என்ற பாடல் காட்சியில் சிவகுமாரின் முகத்தையெல்லாம் அம்பிகா கடிப்பார்.
இந்த படம் 'கார்த்திகை தீபம்' என்ற படத்தின் ரீமேக். தெலுங்கு படத்தில் உள்ள காட்சிகளை அப்படியே படமாக்கியதால் வந்த ரொமான்ஸ் இது. இந்த படத்தை ஏ.ஜெகநாதன் இயக்கி இருந்தார். கங்கை அமரன் இசை அமைத்திருந்தார்.




