தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
'மதயானைக்கூட்டம்' படத்தில் அறிமுகமானவர் கதிர். அதன்பிறகு 'கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், சிகை, பிகில்' உள்பட பல படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது 'மீஷா' என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். கடந்த 1ம் தேதி வெளியான இந்த படம் கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் அவர் தமிழ் இளைஞராகவே நடித்துள்ளார். தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.
யூனிகார்ன் மூவீஸ் பேனரின் கீழ் சஜீர் கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஷைன் டாம் சாக்கோ, ஹக்கிம் ஷா, ஜியோ பேபி, ஸ்ரீகாந்த் முரளி, சுதி கோபா, உன்னி லாலு மற்றும் ஹஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூரஜ் எஸ் குரூப் இசை அமைத்துள்ளார், சுரேஷ் ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.ஜி.ஜோசப் இயக்கி உள்ளார்.
அடர்ந்த காட்டுக்குள் நடக்கும் கிரைம் திரில்லராக படம் உருவாகி உள்ளது. இதில் கதிர் வனகாவலராக நடித்துள்ளார்.