நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

வீர தீர சூரன் படத்திற்கு பின் விக்ரம் நடிப்பில் உருவாகும் படங்களில் குழப்பம் ஏற்பட்டது. மடோன் அஸ்வின் இயக்கும் படத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்தது. படப்பிடிப்பு நடந்ததாக கூட சொன்னார்கள். பின்னர் தள்ளிப்போனது. இதையடுத்து பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருந்தார். ஆனால் அதன் கதை, திரைக்கதை பணிகள் முடியாததால் அதுவும் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது ‛ஹாய்' பட இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகியுள்ளது. வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் ஆக் ஷன், என்டர்டெய்னர் கதைக்களத்தில் உருவாகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதன் மூலம் முதல் முறையாக விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக விக்ரம் நடித்த 'மகான்' படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக முதலில் அறிவித்து, பின்னர் சந்தோஷ் நாராயணன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.