படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
1980களில் நிறைய ஹிந்தி படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. சிவாஜி, ரஜினி அதிக ரீமேக் படங்களில் நடித்தனர். அரிதாக ஒரு சில தமிழ் படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அது பெரும்பாலும் பெரிய நடிகர்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்களாக இருக்கும். இப்படியான சூழலில் சிவகுமார் நடித்த 'உன்னை நான் சந்தித்தேன்' படம் ஹிந்தியில் ரீமேக் ஆனது.
கே.ரங்கராஜ் இயக்கிய இந்த படத்தில் சிவகுமார், சுஜாதா, சுரேஷ், ரேவதி, மோகன் நடித்தார்கள். இளையராஜா இசையமைத்தார். மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவை தம்பி தயாரித்தார்.
படத்தின் நாயகன் சிவகுமார் மனைவி சுஜாதா மீது அதிகமாக சந்தேகப்படுவார். இந்த சந்தேக புத்தியால் பாதிக்கப்படும் சுஜாதா வீட்டை விட்டு ஓடி விடுவார். 20 வருடங்களுக்கு பிறகு சிவகுமார் மனைவியை மீண்டும் சந்திக்கிறார். அப்போது அவருக்கு திருமணமாகி ரேவதி மகளாக இருக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
இந்த படம் தமிழில் பெரிய வெற்றி பெற்றது. ஹிந்தியில் 'சிந்தூர்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. சிவகுமார் நடித்த கேரக்டரில் சசிகபூர் நடித்தார், சுஜாதா நடித்த கேரக்டரில் ஜெயபிரதா நடித்தார். தெலுங்கில் 'சுமங்கலி' என்ற பெயரில் ரீமேக் ஆகி அங்கும் வெற்றி பெற்றது.