கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
1970களில் ஜோதி லட்சுமி, ஜெயலட்சுமி நடனம் ஆடாத படங்களே இல்லை. 1980களில் சில்க் ஸ்மிதா, அனுராதா ஆடாத படங்கள் இல்லை. தற்போதெல்லாம் ஹீரோயின்களே கவர்ச்சி ஆட்டங்களை ஆடிவிடுவதால் கவர்ச்சி நடன நடிகை என்ற ஒரு பிரிவு இல்லை.
இந்த வரிசையில் முதன் முதலாக சினிமாவில் நடன கலைஞர்களாக இருந்தவர்கள் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள். 'திருவிதாங்கூர் சிஸ்டர்ஸ்' என்று அழைக்கப்பட்ட இவர்கள், கதையோடு தொடர்பாகவோ, அல்லது தனித்தோ இவர்களது நடனங்கள் திரைப்படங்களில் இடம் பெற்றது. ஒரு கட்டத்தில் ராகினி விலகி கொள்ள, லலிதாவும், பத்மினியும் தொடர்ந்து ஆடினார்கள்.
அவர்கள் ஆடியதெல்லாம் பரத நாட்டியம்தான், தனி நடனமாகவோ, நாட்டிய நாடகமாவோ அவைகள் படத்தில் இடம் பெற்றன. 'லலிதா, பத்மினி நடனம் இடம்பெற்ற படம்' என்றே விளம்பரமும் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஒரு கட்டத்திற்க பிறகு அவர்கள் மேற்கத்திய நடனங்களும் ஆடத் தொடங்கினர். இதை தொடங்கி வைத்த படம் 1950ம் ஆண்டு வெளிவந்த 'விஜயகுமாரி' என்ற படம். ஒரு மன்னனை வீழ்த்தி ஒரு சீர்திருத்தவாதி நாட்டை பிடிக்கிற கதை.
கே.ஆர்.ராமசாமி, டி.ஆர்.ராஜகுமாரி , டி.எஸ்.பாலையா, செருகளத்தூர் சாமா, குமாரி கமலா, பி.கே.சரஸ்வதி, ஆர்.பாலசுப்ரமணியம், கே.ஆர்.ராம் சிங், எம்.என்.நம்பியார், 'புலிமூட்டை' ராமசாமி, கே.எஸ்.அங்கமுத்து, எம்.எஸ்.எஸ்.பாக்யம், கே.சயீராம், உள்பட பலரும் நடித்திருந்தார்கள். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கி இருந்தார். சி.ஆர்.சுப்பாராமன் இசை அமைத்திருந்தார், ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.
படம் முடிந்ததும், படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஜூபிடர் சோமுக்கு படம் திருப்தியாக இல்லை. படத்தில் பிரச்சார நெடி அதிகமாக இருப்பதாக கருதினார். இதனால் படத்தை ஜாலியானதாக மாற்ற என்ன செய்யலாம் என்று நினைத்தவர், லலிதா, பத்மினியை அழைத்து வழக்கமான பரத நாட்டிய நடனம் தவிர்த்து அவர்களை மேற்கத்திய நடனம் ஆட வைத்தார், கூடவே வைஜயந்தி மாலாவை அழைத்து ஒரு பாடலுக்கு ஆட வைத்தார்.
படம் வெளியான பிறகு இந்த பாடல்களும், நடனங்களும் வரவேற்பை பெற்றாலும் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதற்கு பிறகு லலிதா, பத்மினி சகோதரிகள் பல படங்களில் மேற்கத்திய நடனம் ஆடினார்கள்.