‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

தனது பெயருக்கு முன்னால் ஊர் பெயரை சேர்த்துக் கொண்டவர் தாம்பரம் லலிதா. ஆனால் லலிதாவின் சொந்த ஊர் திருவரங்கம். லலிதாவின் தந்தை மறைந்ததால் பிழைப்பு தேடி சென்னை வந்து தாம்பரத்தில் குடியேறினர். அங்கு இசை பள்ளியும், நடன பள்ளியும் தொடங்கினார்.
தாயிடமிருந்து நடனம் கற்ற லலிதா தனியாக நடனபள்ளி நடத்தினார். பல நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் நாடக குழுவை தொடங்கினார். எம். ஆர். ராதா, எஸ். ஏ. நடராஜன், ஆர். எஸ். மனோகர் ஆகியோர் நடத்திய நாடகத்திலும் நடித்தார்.
அதன் மூலம் சினிமா வாய்ப்பு வந்தது. முதலில் துணை வேடங்களிலும், இரண்டாவது நாயகியாகவும் நடித்தார். 'ஸ்ரீரங்கம் லிலிதா' என்ற பெயரில் நடிக்கத் துவங்கி 'தாம்பரம் லலிதா' என்ற பெயருக்கு மாறினார். எஸ். ஏ. நடராஜன் தயாரித்து, இயக்கிய 'கோகிலவாணி' படத்தின் நாயகியானார்.
ஆனால் அதன் பிறகு தொடர்ச்சியாக நாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மற்ற கேரக்டர்களில் நடித்தார். டவுன் பஸ், மீண்ட சொர்க்கம், அமுதவல்லி, பாகப்பிரிவினை, தெய்வப்பிறவி, திலகம், சிவகெங்கைச் சீமை போன்றவை இவர் நடித்த முக்கிய படங்கள். பிற்காலத்தில் துரை இயக்கிய 'பசி', கங்கை அமரன் இயக்கிய 'கோழி கூவுது' போன்ற படங்களில் நடித்தார்.
எம். ஆர். ராதாவின் நாடகக் குழுவில் இருந்த கே. எம். நம்பிராஜன் என்பவரை லலிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். நம்பிராஜன் நடிகர் குமரிமுத்துவின் அண்ணன். ஒருகட்டத்தில் சொத்துக்களை இழந்தார், கணவரை பிரிந்தார்.
வறுமையில் வாடிய லலிதாவிற்கு உதவும் வகையில் எம். ஆர். ராதா 'ரத்தக் கண்ணீர்' நாடகம் நடித்து அதில் கிடைத்த பணத்தை கொடுத்தார். அதை வைத்து தனது இறுதி காலத்தை கழித்தார் லலிதா. புற்றுநோயால் பாதிக்கபட்ட லலிதா கவனிக்க ஆளின்றி சென்னை அரசு பொது மருத்துவனையில் 1983ம் ஆண்டு இறந்தார்.