புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

கடந்தாண்டு கோவாவில் நடைபெற்ற 55வது சர்வதேசத் திரைப்பட விழாவில் காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஒரே மேடையில் தோன்றினர் அப்போது 'காந்தாரா' படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் தெய்வம் போன்று நடித்த ரன்வீர் சிங் 'ஓ...'என்ற ஆங்கார குரலையும் எழுப்பினார். இதனை அவர் எதார்த்தமாக செய்தாலும் ரிஷப் ரெட்டியையும், பெண் தெய்வத்தையும் கிண்டல் செய்வது போல் மாறிவிட்டது. இதுபெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது.
ஆனால் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும், தவறாக புரிந்து கொண்டிருந்தால் மன்னிப்புக் கோருவதாகவும் ரன்வீர் சிங் தெரிவித்தார். இதனிடையே இது கடலோர கர்நாடகாவின் புனிதமான 'பூத கோலா' கலாச்சாரத்தை அவமதிப்பதாகக் கூறி, பெங்களூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் மேத்தல் என்பவர் ரன்வீர் சிங் மீது புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் ரன்வீர் சிங் மீது மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் மத விரோதத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தன்மீது பதியப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்யுமாறு நடிகர் ரன்வீர் சிங் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். எதார்த்தமாக இயல்பாக நான் நடந்து கொண்ட சம்பவம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும், இது குறித்து தான் பகிரங்க மன்னிப்பு கேட்டு விட்டதாகவும் அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் .